பொன்னியின் செல்வனில் இணைந்த சோபிதா துலிபாலா….!

தனது பல நாள் கனவு கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இயக்குவதில் ஆர்வமாகியுள்ளார் மணிரத்னம்.

இந்தப் படத்தின் திரைக்கதையை மணிரத்னத்துடன் இணைந்து குமரவேலும் உருவாக்கியுள்ளார். வசனகர்த்தாவாக ஜெயமோகன் , சண்டைக் காட்சிகள் இயக்குநராக ஷாம் கெளஷல், எடிட்டராக ஸ்ரீகர் பிரசாத், ஆடை வடிவமைப்பாளராக ஏகா லக்கானி, மேக்கப் கலைஞராக விக்ரம் கைக்வாத், நடன வடிவமைப்பாளராக பிருந்தா ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு கலை இயக்குநராக தோட்டாதரணி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் . இது தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் உருவாக உள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்தின் பட்ஜெட் ரூ.800 கோடி என்று கூறப்படுகிறது. மேலும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வைரமுத்து 12 பாடல்கள் எழுதுகிறார்.

கார்த்தி, விக்ரம், ஜெயம்ரவி, கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் இணைந்துள்ளனர். மிகப் பிரபல கதாபாத்திரனமான வந்தியதேவனாக கார்த்தியும், நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், அருள்மொழிவர்மனாக ஜெயம் ரவியும், ஆதித்த கரிகாலனாக விக்ரமும் நடிப்பதாக தகவல்கள் வந்தன. நந்தினி என்ற வில்லி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்க இருக்கிறார்.

இந்நிலையில், படத்தில் ‘சோபிதா துலிபாலா’ என்ற ஹிந்தி நடிகை ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். குச்சிபுடி மற்றும் பரத்நாட்டியத்தில் தேர்ச்சி பெற்ற ஒரு இளவரசி வேடத்தில் இவர் நடிக்கிறார்.

ஐஸ்வர்யா மற்றும் சோபிதா இருவரும் அவர்களின் கதாபாத்திரத்திற்காக தீவிரமாக பயிற்சியெடுத்து வருகின்றனர்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


-=-