சமூக ஆர்வலர் தபோல்கர் கொலை திட்டமிடப்பட்ட பயங்கரவாத செயல்: சி.பி.ஐ.

டில்லி:

மூக ஆர்வலர் நரேந்திர தபோல்கரின் கொலை ஒரு திட்டமிடப்பட்ட பயங்கரவாத செயல் என மத்திய புலனாய்வு நிறுவனம் (சிபிஐ) தெரிவித்துள்ளது.

தபோல்கர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் மீது, சட்ட விரோத நடவடிக்கை கள் தடுப்பு சட்டத்தின் (UAPA) கீழ் வழக்குப் பதிவு செய்ய அனுமதி கோரி புனே செஷன்ஸ் நீதிமன் றத்தில், சி.பி.ஐ. மனு தாக்கல் செய்துள்ளது .

புனேயைச் சேர்ந்த, சமூக ஆர்வலர், நரேந்திர தபோல்கர், மகாராஷ்டிரா மூடநம்பிக்கை ஒழிப்புக் கழகத்தைத் தொடங்கி, அதன் மூலம் மூடநம்பிக்கை ஒழிப்பு தொடர்பான மசோதா ஒன்றை மகாராஷ்டிர சட்டப்பேரவையில் கொண்டு வர முனைந்தார். `அந்த மசோதா இந்துமதப் பாரம் பரியத் துக்கு எதிரானது’ என்று ஆளும் பி.ஜே.பி-யும், சிவசேனாவும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததை யடுத்து, மசோதா கிடப்பில் போடப்பட்டது.

இந்த நிலையில்,  கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20-ம் தேதி காலை நடைப்பயிற்சி செய்யும்போது தபோல்கர்  சில மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. விசாரணயை தொடர்ந்து, சி.பி.ஐ.அதிகாரிகள், அந்தூரே, கலஸ்கர், தவ்தே, ராஜேஷ் பேங்கரா, அமோல் காலே மற்றும் அமித் டிக்வேகர் ஆகிய ஆறு பேரை கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில், பேங்கராவும் காலேயும் செப்டம்பர் 5, 2017 ஆம் ஆண்டு பெங்களூரில் சுட்டுக் கொல்லப்பட்ட பத்திரிகையாளரா  கவுரி லங்கெஷ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.