சமூக பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் சிறப்பு: நிதிஆயோக் பாராட்டு

டில்லி:

மூக-பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு சிறப்பாக செயல்படுகிறது என்று நிதி ஆயோக் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது.

மோடி பிரதமராக பதவி ஏற்றதும் மத்திய திட்டக்குழுவுக்கு மூடுவிழா நடத்திவிட்டு நிதிஆயோக் என்ற புதிய அமைப்பை ஏற்படுத்தினார். இதில் நிதி (NITI – National Institution for Transforming India) என்பதன் பொருளாகும். இந்த அமைப்பு கடந்த  2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதி யிலிருந்து செயல்பட்டு வருகிறது.

யில் தமிழகம் சிறப்பு: நிதிஆயோக்

இந்த அமைப்பு அவ்வப்போது நாட்டின் நிதி முதலீடு, தொழில் வளர்ச்சி, முதலீடு போன்றவை குறித்து ஆய்வுகள் நடத்தி ஆலோசனைகளை கூறி வருகிறது.

தற்போது நாட்டிலுள்ள மாநிலங்களின் சமூக பொருளாதார குறியீடுகள் குறித்த அறிக்கையை நிதி ஆயோக் அமைப்பு  வெளியிட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் தமிழகம் சிறப்பாக செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பசியை தீர்ப்பதில் சிறப்பாக செயல்படுவதாக கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் செயல்படுத்தப்படும் இலவச திட்டங்கள் குறித்த பல்வேறு விமர்சனங்கள் எழுந்து அது குறித்த விவாதங்கள் நடந்து வரும் வேளையில் அரசின் இலவச உணவு திட்டங்கள் போன்றவையால் தமிழகத்தில் சமூக பொருளாதாரம் வளர்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையுடன் மத்திய அரசு இணைந்து தயாரித்த 2018 சமூக-பொருளாதார குறியீட்டு அறிக்கையில்  தமிழகம் சிறப்பாக செயல்படுவதாக தெரிவித்து உள்ளது.

அத்துடன்,  கேரளா, ஹிமாச்சல பிரதேசம், சத்தீஸ்கர் ஆகியவை சிறப்பாக செயல்பட்டுள்ளதாக வும் தெரிவித்துள்ளது. குறிப்பாக கேரளாவில் நல்ல சுகாதாரம், கல்வி வழங்கி, பசியைக் குறைத்து பாலின சமத்துவத்தை அதிகரித்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த குறியீட்டில் அசாம், பீகார், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்கள் மோசமாக செயல்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.