புதுடெல்லி:

ள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் போது வகுப்பறைகளில் சமூக விலகல் கடைபிடிக்கப்படும் என்றும், 30 சதவிகித மாணவர்களுடன் வகுப்பறைகள் இருக்கும் என்றும் ரமேஷ் போக்கிரியால் தெரிவித்துள்ளார்.

கொரோனா பொது முடக்கத்திற்குப் பின்பு, பள்ளிகளைத் திறப்பதற்கான ஒரு புதிய முறையை என்.சி.இ.ஆர்.டி ஆராய்ந்து வருவதாகவும், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களுக்கான முறைகளை யு.ஜி.சி உருவாக்கி வருகிறது என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் ஆசிரியர்களுடனான காணொலி உரையாடலின் போது தெரிவித்திருந்தார்.

இந்த சந்திப்பின் போது, பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் போது வகுப்பறைகளில் சமூக விலகல் கடைபிடிக்கப்படும் என்றும், 30 சதவிகித மாணவர்களுடன் வகுப்பறைகள் இருக்கும் என்றும் ரமேஷ் போக்கிரியால் குறிப்பிட்டு இருந்தார்.

வகுப்புகளுக்கான நேரங்களை மாற்றியமைத்தல், வகுப்பை வெவ்வேறு பிரிவுகளாகப் பிரித்தல், சமூக விலகல் நெறிமுறை அடிப்படையில் இருக்கைகள் ஏற்பாடு செய்தல் போன்றவைகள் பள்ளிகள் மீண்டும் திறக்கும்போது அறிமுகப்படுத்தப்பட்ட முக்கிய அம்சங்களில் ஒன்றாக இருக்கலாம் என்றும் அவர் கூறியிருந்தார்.

2020-21ஆம் ஆண்டுக்கான கல்வியாண்டுப் பருவம், பழைய கல்லூரி மாணவர்களுக்கு 01.08.2020 அன்றும், புதிய கல்லூரி மாணவர்களுக்கு 01.09.2020 அன்றும் தொடங்கும் என்று பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்திருந்தாலும், பள்ளிகள் திறப்பு எப்போது என்று இதுவரை தெரிவிக்கப்படவில்லை. மாணவர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்திவருகிறோம். கொரோனா வைரஸ் காரணமாக ஏற்படும் நிலைமை இயல்பாக்கப்பட்ட பின்னரே பள்ளிகள் திறக்கப்படும் ”என்று ரமேஷ் பொக்ரியால் கருத்து தெரிவித்திருந்தார்.

கொரோனா பொது முடக்கநிலையால், மார்ச் நடுப்பகுதியில் இருந்து பள்ளிகளும் கல்லூரிகளும் மூடப்பட்டன. அதனையடுத்து, டி.டி.எச் சேனல், திக்‌ஷா, இ-பாடசாலை, தேசிய டிஜிட்டல் நூலகம், ஸ்வயம், ஃபாசி, இ-ஷோத்சிந்து, இ-யந்ரா, மொழி கற்றுக்கொள்வதற்கான தனிப்பயிற்சி மற்றும் மெய்நிகர் ஆய்வுக்கூடங்கள் போன்ற மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் பல்வேறு இயங்குதளங்களை ஆசிரியர்கள் ஊக்குவிக்குமாறு கேட்டுக் கொள்ளப் பட்டனர்.

ஆன்லைன் வழி கல்வி முறையில் புதுமையை உண்டாக்கும் வகையில் உருவாக்கப்பட்ட தீக்ஷா வலைத்தளத்தில் ஆசிரியர்கள் பங்களிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இதுவரை 9000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தங்கள் பங்களிப்புகளை தந்துள்ளதாகவும், இந்த இக்கட்டான சூழ்நிலையை ஆன்லைன் கல்வி முறை உள்கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டார்.