திருப்பதி :
கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டது முதல் பக்தர்கள் வருகைக்கு தடைவிதிக்கப்பட்டு மூடியிருந்த திருப்பதி ஏழுமலையான் கோயிலில், தற்போது மீண்டும் பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

கடந்த மூன்று மாதங்களாக நாட்டில் மக்கள் பட்ட துயரத்தை கண்கூடாக பார்தத மக்கள் தங்களை துயரிலிருந்து காப்பாற்றிய பெருமாளுக்கு நன்றிக்கடன் செலுத்த முடி காணிக்கை உள்ளிட்ட பல்வேறு காணிக்கைகள் செலுத்தி வருகின்றனர்.
முடி காணிக்கை செலுத்த வரும் பக்தர்களுக்கு தேவஸ்தான நிர்வாகம் சமூக இடைவெளியுடன் கூடிய பாதுக்காப்பான மற்றும் நிறைவான சேவையை வழங்க தேவையான முன்னேற்பாடுகளை செய்துள்ளது.
முடி காணிக்கை செலுத்துமிடத்தில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை இணைப்பிலுள்ள வீடியோவில் காண்க