சமூக வலைதள கணக்குடன் ஆதார் இணைக்கப்பட வேண்டும்! உச்சநீதி மன்றத்தில் மத்தியஅரசு தகவல்

டெல்லி:

மூக வலைதள கணக்குடன் ஆதார் இணைக்கப்பட வேண்டும் என்றும் உச்சநீதி மன்றத்தில் மத்தியஅரசு வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் தெரிவித்து உள்ளார்.

நாட்டின் பெரும்பாலான பரிவர்த்தனைகளுக்கு ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது போலிச் செய்திகள்,  வதந்திகள் போன்றவற்றை தடுக்கும் வகையில் ஃபேஸ்புக் உள்பட சமூக வலைதளங்களில் கணக்குகள் வைத்திருக்க பயனர்களின் ஆதார் எண் இணைக்கப்பட வேண்டும் என்றும் இது தொடர்பான வழக்கில் மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.

ஃபேஸ்புக் பயனாளர்களின் அடையாளத்தை அங்கீகரிப்பதற்காக ஆதார் தரவுகளை பேஸ்புக்கின் சுயவிவரங்களுடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக நாட்டின் பல பகுதிகளிலும் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவற்றை ஒன்றாக்கி சுப்ரீம் கோர்ட்டே விசாரிக்க வேண்டும் என்பது பேஸ்புக் நிறுவனத்தின் மூலம் உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை நேற்று தொடங்கிய நிலையில், இன்றும் நடைபெற்று வருகிறது.  இன்றைய விசாரணையின்போது மத்தியஅரசு தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால், ஃபேஸ்புக் சமூக வலைதள கணக்குடன் ஆதார் எண் இணைக்கப்பட வேண்டும் என்றும்,  தேச விரோத நடவடிக்கைகளை  கட்டுப்படுத்த சமூக ஊடகக் கணக்குகளை ஆதார் உடன் இணைக்க வேண்டும் என்றும், இதன் காரணமாக  இது போலி செய்திகள், தேச விரோத சக்திகள் கண்காணிக்கப்பட முடியும் என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து ஃபேஸ்புக் நிறுவனத்தினரின்  ஆதார் உடனான கணக்குகளை உச்ச நீதி மன்றத்திற்கு இணைக்கக் கோரிய மனுவை ஏற்றுக்கொள்வதாக அறிவித்துடன்,  இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மனுக்களையும் மாற்றுமாறு  உத்தரவிட்டு உள்ளது.

ஏற்கனவே  ஆதார் கார்டில் இருக்கும் 12டிஜிட் (digit) நம்பர் இருந்தால், ஒருவரின்  தகவல்  முழு விவரங்களுடன் கண்டுபிடிக்க என்ற பீதி மக்களிடையே நிலவி வருகிறது. அதைத்தொடர்ந்து,   ஆதார் நம்பரை  சோசியல் மீடியா வெப்சைட்டில் ஷேர்  செய்ய வேண்டாம் என்று ஆதார் நிறுவனமான உதய் (UIAD) எச்சரிக்கை விடுத்திருந்தது. 

ஆனால், தற்போது மத்தியஅரசோ, ஆதார் எண்ணை சமூக வலைதள கணக்குடன் இணைக்க வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளது.

ஏற்கனவே  டிராய் அமைப்பின் தலைவர் சர்மா, டிவிட்டர் சமூக வலைதளத்தில்  தனது ஆதார் நம்பரை பதிவிட்ட  சில நிமிடங்களிலேயே, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஏலியட் ஆல்டென்சர் என்னும் ஹேக்கர் சர்மா குறித்த முழு விவரங்களையும் டுவிட்டரில் பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்…