சமூக வலைதளத்தில் அதிகம் ஷேர் ஆன   திருடன் –  பொருளை பறிகொடுத்தவரின் சந்திப்பு! 

சில விநோதமான சம்பவங்கள் அன்றைய நாளையே சுவாரஸியமாக்கும். அப்படி மொபைல் ஆப் மூலம் திருடனையும் பொருளை இழந்தைவனையும் சந்திக்க வைத்த நிகழ்வு சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

ஒரு பெண்ணிடம் டிண்டர் சமுகவலைதளம் மூலம் பேசிய ட்ரூ என்பவர், ஓரிடத்தில் கேட்பாரற்றுக் கிடந்த பொருட்களை எடுத்து வந்ததாகக் கூறியுள்ளார். அப்போது அப்பெண்ணிடம், ரேமண்ட் என்கிறவர் தன் பொருட்கள் திருட்டுப் போய்விட்டதாகக் கூறியுள்ளார்.

சம்பவம் நடந்த  இடம், பொருள்  எல்லாவற்றையும் கேட்டுத் தெரிந்துகொண்ட அப்பெண், அவர்கள் இருவரையும் சந்திக்க வைத்து பொருடளை இழந்தவரிடம் அவரின் பொருட்களை சேர்த்துள்ளார். இதனை வலைதளத்தில் எழுத அது வைரலாகி வருகிறது. டிவிட்டரில் 236,000 முறை இப்பதிவு பகிரப்பட்டுள்ளது.