காஷ்மீரில் சமூக வலைதளங்கள் மீண்டும் முடக்கம்!

ஸ்ரீநகர்,

காஷ்மீர் பகுதியில் அதிகரித்து வரும் பொதுமக்கள், பாதுகாப்பு படையினருக்கும் இடையேயான தாக்குதலை தொடர்ந்து பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களை முடக்கி வைக்க உத்தரவிடபபட்டுள்ளது.

“மக்கள் நலனை கருத்தில் கொண்டு இந்த வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளன. இந்த ஆணை ஒரு மாத காலத்திற்கு அல்லது அடுத்த ஆணை வரும் வரை தொடரும்”, என காஷ்மீரின் உள்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.

பிரிட்டிஷ் காலத்தில் கொண்டுவரப்பட்ட”இந்திய டெலிகிராஃப் சட்டம் 1885″ படி இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

காஷ்மீரில் புர்கான் வாணி என்ற பயங்கரவாதி கடந்த ஆண்டு கொல்லப்பட்டதில் இருந்து கலவரங்கள் நடைபெற்று வருகிறது. அதைத்தொடர்ந்து அப்போது சமூக தலைவதளங்கள் முடக்கப்பட்டு, மீண்டும் பயன்பாட்டுக்கு விடப்பட்டது.

தற்போது இந்த  மாதத் தொடக்கத்தில் நடைபெற்ற இடைத் தேர்தல் கலவரத்திற்கு பிறகு ஏற்பட்டுள்ள கலவரத்தால் பதற்றங்கள் அதிகரித்துள்ளன.

பொதுமக்கள்,  மாணவர்கள், இளைஞர்கள் பாதுகாப்பு படையினருக்கு எதிராக  கலவரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்

இதுகுறித்த கருத்துக்கள் சமூக வலைதளங்கள் மூலமாக பகிரப்பட்டு போராட்டங்கள் தீவிரப்படுத்தப்படுகின்றன.  அதன் காரணமாக திடீரென  கல்லூரிகளும் மூடப்படுகின்றன. சீருடை அணிந்த பெண்கள் போலிஸாரின் மீது கல் வீசும் காட்சிகளையும் காண முடிந்தது.

இதன் காரணமாக சமூக வலைதளங்களை முக்க அரசு முடிவு செய்தது.

காஷ்மீரில் நிலவும் சூழ்நிலையை தீவிரமாக ஆராய்ந்த பின்னரே சமூக வலைத்தளங்களை முடக்கும் முடிவை எடுத்துள்ளதாக போலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

“சமூக ஊடகங்களில் போலியான பதிவுகள் மூலம் குற்றவாளிகள் இளைஞர்களை தூண்டக்கூடும். அது நீண்ட நாட்கள் நிலவும் ஒரு கவலையாக இருப்பினும் தற்போது சூழல் கட்டுப்பாட்டை மீறி செல்வதால் தற்காலிக தடைதான் தற்போது விதிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினர்.