சமூக அங்கீகாரங்கள் தொடர வேண்டும்: தேர்தலில் வெற்றி பெற்ற திருநங்கை ரியாவிற்கு கனிமொழி வாழ்த்து!

--

சென்னை:

மூக அங்கீகாரங்கள் தொடர வேண்டும் என்று உள்ளாட்சி  தேர்தலில் வெற்றி பெற்ற திருநங்கை ரியாவிற்கு திமுக எம்.பி. கனிமொழி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்குஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு  திமுக சார்பில் திருநங்கை ரியா போட்டியிட்டார். அவர் 950 வாக்குகள் வித்தியாசத்தில், தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.

இதற்கு அரசியல் கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில் திமுக எம்.பி. கனிமொழியும் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு 2வது வார்டு ஒன்றியக் கவுன்சிலராக திமுக வேட்பாளர் திருநங்கை ரியா வெற்றி பெற்றிருக்கிறார். அவருக்கு என் வாழ்த்துகள். திருநங்கைகளுக்கு இதுபோன்ற சமூக அங்கீகாரங்கள் தொடர வேண்டும்.

 மாற்றத்திற்கு வித்திடுவதில், எப்போதும் தொடக்கப் புள்ளியாக திமுக திகழ்கிறது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகியுள்ளது.

என்று பதிவிட்டு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.