சமூக சேவை: நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு அன்னை தெரசா நினைவு விருது!!

டில்லி,

மூக பங்களிப்புக்காகவும்,  சமூக நீதிக்காகவும். சமூக சேவைக்காகவும் நடிகை   பிரியங்கா சோப்ராவுக்கு அன்னை தெரசா நினைவு விருது வழங்கப்பட்டது.

நடிகை பிரியங்கா சோப்ரா சமூக காரணங்களுக்கான பங்களிப்பை வழங்கி வருவதால், அவருக்கு ஹார்மனி அறக்கட்டளையின் சார்பாக  அன்னை தெரசா நினைவு விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரியங்கா சோப்ரா, அகதிகள்  மற்றும் இடம்பெயர்ந்த மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வருகிறார். மேலும், அவர்களுக்கு , தேவையானவர்களுக்கு உதவிகளை செய்தும் வருகிறார்.

மேலும், சமூக நலனில் ஈடுபடும் யூனிசெப் அமைப்பின் நல்லெண்ண தூதுவராகவும் பிரியங்கா சோப்ரா உள்ளார்.

அதைத்தொடர்ந்து, பொதுநலனில் ஈடுபட்டு வந்த பிரியங்காவுக்கு ஹார்மனி அறக்கட்டளை, அன்னை தெரசா விருது வழங்கி கவுரவித்தது.

இந்த விருதை பிரியங்கா சார்பாக  தாயார் டாக்டர் மது சோப்ரா, பிரியங்கா சார்பாக பெற்றுக் கொண்டார்.

இந்த விருதுகுறித்து பிரியங்கா சோப்ராவின் தயார் மது சோப்ரா கூறியதாவது,

பிரியங்காவுக்காக   இந்த விருதினை பெறுவதில் மிகவும் பெருமை கொள்கிறேன் என்றும், இந்த  பெருமை மிக்க  விருதினை பணிவுடன் ஏற்று கொள்கிறேன் என்ற அவர், இதுபோன்ற  கருணை மற்றும் இரக்கம் கொண்ட ஒரு குழந்தையை பெற்றதற்காக நான் பெருமை அடைவதாகவும் கூறனார.

நீங்கள் எவ்வளவு கொடுக்கிறீர்களோ அந்த அளவிற்கு பெறுவீர்கள் என்ற உண்மைக்கு எடுத்துக்காட்டாக பிரியங்க வாழ்ந்து வருகிறாள் என்றும், அவள் ஒரு குழந்தையாக இருந்த பொழுதும், அன்னை தெரசாவால் ஈர்க்கப்பட்டு இருக்கிறாள். அவள் பரேலியில் உள்ள பிரேம் நிவாஸ் அமைப்புக்கு ஆதரவு தெரிவித்து வருகிறாள்.

பிரியங்காவின் சேவையை அங்கீகரித்திருப்பதற்காக ஹார்மனி அறக்கட்டளைக்கு நான் நன்றி

இவ்வாறு அவர் கூறினார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Social service: actress Priyanka Chopra awarded Mother Teresa Memorial Award, சமூக சேவை: நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு அன்னை தெரசா நினைவு விருது!!
-=-