வீடியோவில் புகார் கூறிய ராணுவ வீரரின் விருப்ப ஓய்வு மனு நிராகரிப்பு

டெல்லி:

ராணுவ வீரர்களுக்கு மோசமான உணவு வழங்குவதாக சமூக வலைதளத்தில் புகார் கூறிய எல்லை பாதுகாப்பு வீரரின் விருப்ப ஓய்வு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.


சில நாட்களுக்கு முன் எல்லை பாதுகாப்பு படையின் 29வது பட்டாலியன் பிரிவை சேர்ந்த தேஜ் பகதூர் யாதவ் என்ற வீரர் செல்போனில் பதிவு செய்யப்பட்ட வீடியோவை வெளியிட்டார்

. ‘‘ராணுவ வீரர்களுக்கு ரொட்டியும், பாலும் வேகவைத்த பருப்பும் மட்டுமே உணவாக வழங்கப்படுகிறது. 11 மணி நேரத்திற்கு மேல் நின்று கொண்டு மோசமான தட்பவெப்ப நிலையில் பணிபுகிறோம். அனைவரும் வெறும் வயிற்றுடனேயே தூங்க செல்கிறோம்’’ என்று தெரிவித்திருந்தார். இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில், தேஜ் பகதூர் யாதவின் மனைவி ‘‘தனது கணவர் தன்னுடன் பேசினார். தான் துன்புறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளேன். தனக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார்’’ என புகார் கூறினார்.
இதையடுதுது தேஜ்பகதூர் யாதவ் விருப்ப ஓய்வு கேட்டு விண்ணப்பித்தார். இந்த மனு நிராகரித்து பிஎஸ்எப் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

‘‘அவர் மீது நீதிமன்ற விசாரணை நடைபெறுகிறது. அதனால் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. யாதவ் மனைவி கூறுவது போல் அவரை யாரும் துன்புறுத்தவில்லை. அவருக்கு நெருக்கடியும் இல்லை. கைது செய்யப்படவும் இல்லை’’ அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

You may have missed