டந்த ஆண்டு இதே நாளில் ஜம்மு-காஷ்மீரில் அந்த கோர நிகழ்வு அரங்கேறியது.

அங்குள்ள புல்வாமா பகுதியில் கடந்த ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் பேருந்தில் சென்று கொண்டிருந்தனர்.

ஜெயிஷ்-ஈ- முகம்மது இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதி அதில் அகமது தர் என்பவன் வெடிபொருட்கள் நிரப்பபட்ட காரை, அந்த பேருந்து மீது மோதச்செய்தான். இதில் பேருந்தில் பயணித்த 40 வீரர்களும் உயிர் இழந்தனர்.

‘இந்த செய்தியை டி.வி.யில்.பார்த்த கோடிக்கணக்கான இந்தியர்களில் உமேஷ் ஜாதவும் ஒருவர். இசைக்கலைஞர். ஆஜ்மீரில் கச்சேரியை முடித்து விட்டு ஜெய்ப்பூர் விமான நிலையம் வந்த போது, அங்கே உள்ள டி.வி.யில் 40 வீரர்களின் சடலங்கள் சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்படும் காட்சியை பார்த்து துடித்துப்போனார்.

இவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தார்.நேரில் சென்று அவர்கள் குடும்பத்துக்கு ஆறுதல் கூற முடிவு செய்தார்.

நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் சிதறி இருந்த 40 வீரர்களின் ஊர்களுக்கு காரில் நேரடியாக சென்று ஒவ்வொரு குடும்பத்தினரையும் சந்தித்தார். துக்கங்களை பரிமாறிக்கொண்டார். அவர்களோடு சேர்ந்து அழுதார். அவர்களுடன் உணவு அருந்தினார்.

பஞ்சாப்பில் உள்ள ஒரு வீரரின் குடும்பத்துடன் கடந்த டிசம்பர் மாதம் 21 ஆம் தேதி தனது பிறந்த நாளையும் கொண்டாடினார்.

வீரர்களின் சொந்த ஊர்களில் இருந்து கைப்பிடி மண் எடுத்து வந்துள்ள ஜாதவ் ,ஜம்மு-காஷ்மீரின் லெத்போராவில் உள்ள மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் வளாகத்தில் இன்று நடக்கும் அஞ்சலி நிகழ்வில் பங்கேற்கிறார்.

40 வீரர்களின் குடும்பத்தை சந்திக்க ஜாதவ் பயணம் செய்த தூரம்- 61 ஆயிரம் கிலோ மீட்டர்.

40 வீரர்களின் தியாகத்தோடு, ஜாதவின் சதனையையும் சேர்த்தே போற்றுவோம்.