நாளை (21ந்தேதி) ring of fire சூரிய கிரகணம்: தமிழகத்தில் காலை 10.15க்கு தொடங்கி மதியம் 1.45 வரை நீடிக்கும்

சென்னை:
நாளை ring of fire எனப்படும் நெருப்பு வளைய சூரிய கிரகணம் நிகழ உள்ளது.  இது  காலை 10.15க்கு தொடங்கி மதியம் 1.45 வரை நீடிக்கும்  என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் சில பகுதிகளில் மட்டுமே தெரியும் வாய்ப்பு உள்ளதாகவும் வெறும் கண்ணால் பார்க்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
பூமியை சுற்றும் சந்திரன், சூரியனை சுற்றும் பூமி என நீள் வட்டப்பாதையில் சுற்றி வரும் போது ஆண்டிற்கு சில நாட்கள் ஒரே நேர் கோட்டில் சந்திக்கின்றன. அப்போது சூரியனை நிலவு மறைக்கிறது. இதுவே கிரகணமாக கூறப்படுகிறது.
சூரிய கிரகணத்தின்போது சந்திரனின் நிழல் முழுமையாக சூரியனை மறைத்து விட்டால் அது முழு சூரிய கிரகணம். சூரியன் முழுவதுமாக கருமையாக காட்சி தரும்.  உலகம் முழுவதும் இருண்டு விடும்.
சந்திரனால் ஒரு பகுதி சூரியனை மட்டுமே மறைக்க முடிந்தால் அது பகுதி சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.
சந்திரனின் நிழல் சூரியனின் வட்டத்துக்குள் விழுந்து சூரியனின் விளிம்பு பகுதி நெருப்பு வளையமாக நமக்கு காட்சி அளித்தால் அது நெருப்பு வளைய சூரிய கிரகணம். இதைத்தான் ring of fire என்றும் விஞ்ஞானிகள் அழைக்கின்றனர்.
நடப்பாண்டில்,  வெப்பமான இந்த காலத்தில் ஏற்படும் முதல் சூரிய கிரகணம் நாளை நிகழ உள்ளது. கிரகணமானது காலை 9:15க்கு தொடங்கி மதியம் 3:04 வரை முடிகிறது. அந்த, நிகழ்வை வெறும் கண்களால் பார்க்கக் கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உளளது.
 இந்தியாவில் சூரிய கிரகணம் வட பகுதியின் சில இடங்களின் காலையில் தெரியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். முழு சூரிய கிரகணம் மதியம் 12:10 மணிக்கு தெரியும். வெறும் கண்களால் பார்க்காமல் கண்களை மூடி பார்க்கவேண்டும்.
தமிழகத்தில் சூரிய கிரகணம் காலை 10.15க்கு தொடங்கி மதியம் 1.45 வரை சுமார் 5 மணி நேரம் நீடிக்கும். மேலும் மதியம் 2.02 மணிக்கு கிரகணம் முடிவடையும். 
சென்னையை பொறுத்தவரை 34% சூரியனுடைய பரப்பை சந்திரன் மறைப்பதை பார்க்க முடியும்
தமிழ்நாட்டில் இந்த சூரிய கிரகணம் காலை 10:15,32 மணிக்கு சேலத்தில் தொடங்குகிறது. சென்னையில் 10:21:45 மணிக்கும், கோவையில் 10:12 மணிக்கும், மதுரையில் 10:17:05 மணிக்கும் திருச்சியில் 10:18:20 மணிக்கும் கிரகணத்தைப் பார்க்கலாம்.
இந்தியா மட்டுமின்றி  மத்திய ஆபிரிக்க, காங்கோ, எத்தியோப்பியா, பாகிஸ்தான் மற்றும் சீனா உள்ளிட்ட ஆப்பிரிக்காவிலும் தெரிய வாய்ப்பு இருப்பதாக  சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப மையம் தெரிவித்துள்ளது.