திருமலை:

ருகிற 21-ந்தேதி சூரிய கிரகணம்  அன்று திருப்பதி ஏழுமலையான் கோவில் மதியம் 2.30 மணி வரை மூடப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்து உள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக சுமார் 2 மாத காலமாக மூடப்பட்ட திருப்பதி ஏழுமலையான் கோவில் மீண்டும் கடந்த 8ந்தேதி திறக்கப்பட்டு 11ந்தேதி முதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. கோவிலில் அனைத்து ஆர்ஜித சேவைகளும் வழக்கம்போல் நடந்து வருகின்றன. டைம் ஸ்லாட் டோக்கனில் 3 ஆயிரம் பக்தர்களும், ரூ.300 டிக்கெட்டில் 3 ஆயிரம் பக்தர்களும் என தினமும் மொத்தம் 7 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் வரும் 21ந்தேதி சூரிய கிரணம் வர உள்ளது.  கிரகணமானது கா 10.18 மணிக்கு தொடங்கி மதியம் 1.38 மணிக்கு முடிகிறது. ஆகையால் முன்கூட்டியே, அதிகாலை  ( 21-ந்தேதி)  1 மணிக்கு கோவிலின் நடை அடைக்கப்பட்டு மதியம் 2.30 மணிக்கு திறக்கப்படுகிறது.

பின்னர் தண்ணீரால் சுத்தம் செய்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.  சுமார் 12 மணி நேரம் முதல் 14 மணி நேரம் வரை கோவில் மூடப்படும் என்பதால், அந்த நேரத்தில் பக்தர்களுக்கான சாமி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.