டில்லி

ரும் 2022க்குள் சூரிய ஒளீ மின்சக்தி உற்பத்தி 100 ஜிகாவாட்டை அடையும் என மத்திய மின்துறை அமைச்சர் கூறி உள்ளார்.

தற்போது நடை பெற்று வரும் பாராளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரில்  கேள்வி நேரத்தின் போது மத்திய மின் துறை அமைச்சர் ஆர்.  கே.  சிங் ஒரு கேள்விக்கு பதில் அளித்தார்.    அப்போது அவர், “இந்த வருடம் டிசம்பர் மாதம் எடுக்கப்பட்ட கணக்கின் படி 16,676 மெகாவாட் திறனுள்ள சூரிய ஒளி மின் உற்பத்தி கருவிகள் நிறுவப்பட்டு உள்ளன.   இது தவிர 6500 மெகா வாட் உற்பத்திக்கான கருவிகள் நிறுவப்பட்டு வருகின்றன.

இவைகள் மூலம் வரும் 2019-20 ஆண்டில் சுமார் 20 ஆயிரம் மெகாவாட் சூரிய ஒளி மின் உற்பத்தி செய்யப்பட உள்ளது.    மேலும் கருவிகள் நிறுவப்பட உள்ளன.   அவற்றின் மூலம் வரும் 2022ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 100 ஜிகா வாட் சூரிய ஒளி மின் உற்பத்தி செய்யப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.