புல்வாமாவில் பயங்கரவாதிகளை வேட்டையாடும்போது காயமடைந்த வீரர்… சிகிச்சை பலனின்றி மரணம்

ஸ்ரீநகர்:

காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்கு தலின்போது காயமடைந்த வீரர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் கடந்த 12ந்தேதி பயங்கரவாதி கள் தங்கியிருந்த பகுதிகளை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தியபோது, ஏற்பட்ட மோதலில் காயம் அடைந்த வீரர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

இந்த தாக்குதலின்போது 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பயங்கரவாதி களின் துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த  நாயக் சந்திப் குமார் என்ற வீரர்  ஸ்ரீநகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சிகிச்சை பலனின்றி காலமானார். இவர் அரியானா மாநிலத்தில் பாரிதாபாத் பகுதியை சேர்ந்தர்.

அவரது உடலுக்கு ராணுவத்தினர் மரியாதை செலுத்திய நிலையில், அவரது சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்பட்டு இறுதி சடங்கு நடைபெறுகிறது.