காஷ்மீரில் ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

ஜம்மு காஷ்மீர்:

ஜம்மு- காஷ்மீரில் ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஆர்.எஸ்.புரா எல்லை பகுதியில் லான்ஸ் நயிக் பர்வீஷ் குமார் மிஸ்ரா (வயது 34). ராணுவ வீரர். இவர் இன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிந்தார். அப்போது திடீரென தான் வைத்து இருந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது தலையில் 2 தோட்டாக்கள் இருந்தாக ராணுவ உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

லான்ஸ் நயிக் பர்வீஷ் குமார் மிஸ்ராவின் குடும்பத்தினர் குஞ்சாவானி ராணுவ குடியிருப்பில் வசித்து வருகின்றனர். தற்கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. சம்பவ இடத்தை துணை ஆணையர் சுரிந்தர் சவுத்ரி பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

You may have missed