பாஜகவின் வெறுப்பு நிறைந்த கலாச்சார தேசியவாதத்தின் 6 ஆண்டு சாதனை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

டெல்லி: தனிநபர் வருவாயில் இந்தியாவை வங்கதேசம் முந்துவது தான் பாஜகவின் வெறுப்பு நிறைந்த கலாச்சார தேசியவாதத்தின் 6 ஆண்டுகளின் திட சாதனை என்று ராகுல் காந்தி விமர்சித்து உள்ளார்.

சர்வதேச நிதியமான ஐஎம்எப் ஒரு அறிக்கையை வெளியிட்டு உள்ளது. கொரோனா தொற்றால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும், மைனஸ் 10.3 சதவீதமாக இது குறையும் என்றும் எச்சரித்துள்ளது.

அதே நேரத்தில், தனிநபர் வருவாயில் வங்கதேசம், இந்தியாவை நெருங்கி இருக்கிறது என்றும் கூறி உள்ளது. இந் நிலையில், தனிநபர் வருவாயில் இந்தியாவை வங்கதேசம் முந்துவது தான் பாஜகவின் வெறுப்பு நிறைந்த கலாச்சார தேசியவாதத்தின் 6 ஆண்டுகளின் திட சாதனை என்று ராகுல் காந்தி விமர்சித்து உள்ளார்.

இது குறித்து தமது டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள அவர், வங்கதேசம் இந்தியாவை முந்துகிறது என்பதை குறிப்பிடும் வகையில், ஐஎம்எப் வெளியிட்டுள்ள விளக்க படங்களையும் வெளியிட்டுள்ளார்.