பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரத்தின் 5 நாட்கள் போட்டியாளர்களின் ஆட்சி நடந்தாலும், வாரத்தின் இரண்டு நாட்கள் கமல்ஹாசன் ஆட்சி தான்.

நேற்று கமல் வந்ததும் வராததுமாக நேரத்தின் முக்கியத்துவத்தையும் அதை கணிப்பதை பற்றியும் பேச ஆரம்பித்தார். சாப்பாட்டு விஷயத்தில் அர்ச்சனா மற்றும் சோம் இடையே சின்னதாக சண்டை ஆரம்பித்து பெரியதாக வெடிப்பதற்கு முன்பே முடிந்துவிட்டது.

இன்றைய முதல் ப்ரொமோ வீடியோவில் கமல் 50வது நாளை தொட்டு இருப்பதால் இந்த வீட்டிற்கு உங்கள் பங்களிப்பு என்ன என சொல்லுங்கள் என கேட்டார்.

முதல் ஆளாக பாலாஜி முருகதாஸ் வந்து பேச தொடங்கினர். ஒவ்வொருவருக்கும் ஒரு நிமிடம் மட்டுமே வழங்கப்படும் என கமல் கூறிய நிலையில் பாலாஜி மணிக்கூண்டு டாஸ்கில் எண்ணியது போல கமல் வேகமாக நொடிகளை எண்ணி அவரை கிண்டல் செய்தார்.

தற்போது வெளியான இரண்டாம் ப்ரோமோவில், சோம் சேகரை பாராட்டுகிறார் கமல் ஹாசன். பாக்ஸிங் ஸ்கில்ஸாக இருக்கட்டும், பேசும் போதாக இருக்கட்டும் என்னை சில விஷயங்கள் தடுக்கும் என்று கூறினார். இப்போவே நீங்க வெளியே சென்றாலும், வருத்தப்படுவதற்கு ஒன்றும் இல்லை. உங்களை வெளியனுப்பிடுவார்கள் என்றும் நினைக்காதீர்கள் என்று சோம் சேகரை பாராட்டி பேசியுள்ளார் கமல்.