சோமநாதன்: எடப்பாடிக்கு மோடி வைத்த செக்?

நியூஸ்பாண்ட்:

நீயூஸ்பாண்ட் அனுப்பிய குறுஞ்செய்தி:

தமிழக அரசை மத்திய பாஜக அரசுதான் இயக்குகிறது என்பது ஊரறிந்த ரகசியம்.  அதற்கு வலு சேர்க்கும்படி ஒரு நியமனம் இன்று நடந்திருக்கிறது என்கிறார்கள்.மாநில அரசின் வளர்ச்சி மற்றும் சிறப்பு செயலாக்கத்துறை செயலராக சோமநாதன் நியமிக்கப்பட்டிருக்கிறார். தினத்தந்தி பவளவிழாவுக்கு சென்னை வந்த பிரதமர் மோடி, இந்த சோமநாதன் மகள் திருமணத்திலும் கலந்துகொண்டார். அப்போது சோமநாதன் பொருளாதார ஆலோசகர் பதவியில் இருந்தார்.

சோமநாதன் மகள் திருமணத்தல் கலந்துகொள்வதுதான் மோடியின் நிஜமான திட்டம் என்றும், அதற்கேற்ப தினத்தந்தி பவள விழா நிகழ்ச்சி அன்று வைக்கப்பட்டது என்றும் அப்போதே பேச்சு எழுந்தது.

தற்போது சோமநாதன், மாநில அரசின் முக்கிய பதவியான வளர்ச்சி மற்றும் சிறப்பு செயலாக்கத்துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தமிழக முதல்வருக்கு மோடி வைத்திருக்கும் செக் என்கிறார்கள்.