திமுக தேர்தல் அறிக்கையில் சில திருத்தங்கள்.. புதிதாக 5 வாக்குறுதிகள்

சென்னை:
திமுக தேர்தல் அறிக்கையில் சில திருத்தங்கள் செய்யப்பட்டு, புதிதாக 5 வாக்குறுதிகள் சேர்க்கப்பட்டுள்ளது.

நேற்று மு.க.ஸ்டாலின் வெளியிட்ட திமுக தேர்தல் அறிக்கையில் 505 அறிவிப்புகள் இடம் பெற்றன. இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் சில திருத்தங்கள் செய்துள்ளனர். தேர்தல் அறிக்கையில் 5 வாக்குறுதிகள் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளது.

  • சென்னை – சேலம் 8 வழிச்சாலை திட்டம் என வாக்குறுதி 43ல் சேர்க்கப்படுகிறது.
  • சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை நிராகரிக்கப்படும்.
  • காட்டுப்பள்ளி துறைமுகம் அமைக்க அனுமதிக்கப்படாது.
  • இந்திய குடியுரிமை திருத்தச்சட்டம் 2019-ஐ திரும்பப்பெற மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.
  • குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும்