தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

சென்னை:

மிழகம் மற்றும் புதுச்சேரியில்  சில நாட்களுக்கு  நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை மைய இயக்குனர், தெற்கு உள் கர்நாடகா பகுதியில் இருந்து தமிழகத்தின் மன்னார் வளைகுடா வரையில் மேல் அடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாகவும்,  வெப்ப சலனம் காரணமாகவும் தமிழகத்தில்  கன மழைக்கு வாய்ப்பு  உள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அநேக இடங்களில் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். ஒரு சில இடங்களில் இடியுடன் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு அநேக இடங்களிலும் 2 நாட்களுக்கு ஒரு சில இடங்களிலும் மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவிற்கு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மழையோ, இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஓசூரில் 8 செ.மீ., கோவையில் 6 செ.மீ, வால்பாறையில் 5 செ.மீ. மழை பெய்துள்ளது.

நீலகிரி ஜி.பஜார், பீளமேடு, சூளகிரி, பரமத்தி, கோவை தெற்கு, ஈரோடு ஆகிய இடங்களில் 3 செ.மீ. மழையும் தாளவாடி, தளி, அரவாக்குறிச்சி, ஏற்காட்டில் 2 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: some more days of rain Tamil Nadu and Puducherry: Chennai Weather center Information, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை: வானிலை மையம்
-=-