கெய்ரோ: எகிப்திலுள்ள சக்காராவில் மேலும் சில மம்மிகளை, மர சவப்பெட்டிகளில் கண்டறிந்துள்ளனர் அகழ்வாராய்ச்சியாளர்கள்.
ஏற்கனவே, அங்கு இதேப்போன்று பல மம்மிகள் கண்டறியப்பட்ட நிலையில், தற்போது மேலும் சில மர சவப்பெட்டிகள் கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் அகழ்வாய்வு செய்து கண்டறியப்பட்ட மம்மி சவப்பெட்டிகளின் எண்ணிக்கை 60ஆக உயர்ந்துள்ளது.
அதேசமயம், இதுதொடர்பாக முழுமையான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. அதேசமயம், அந்த சவப்பெட்டிகள் பழங்காலம் முதலே ‘சீல்’ வைக்கப்பட்ட நிலையில் இருக்கின்றன என்று தெரிவித்துள்ளார் எகிப்து நாட்டின் சுற்றுலா மற்றும் பழம்பொருள் துறையின் அமைச்சர் காலித் எல்-எனானி.
புதிதாக கண்டறியப்பட்ட 3 புதை அடுக்குகளில் கண்டறியப்பட்ட இந்த சவப்பெட்டிகள், சுமார் 2500 ஆண்டுகளுக்கும் முற்பட்டவை என்று நம்பப்படுகிறது.
சம்பந்தப்பட்ட இடத்திற்கு, எகிப்திய பிரதமர் முஸ்தஃபா மட்பொலி, பழம்பொருள் உச்ச கவுன்சிலின் பொதுச்செயலாளருடன் சென்று பார்வையிட்டார்.