அமெரிக்க நாடாளுமன்ற வளாகப் போராட்டம் – வேலையை இழக்கும் தனியார் துறை ஊழியர்கள்!

வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்றத்தின் மீது தாக்குதலில் ஈடுபட்ட பலர் அடையாளம் காணப்பட்டு வருவதாகவும், அவர்களில் சிலர் தங்களின் வேலையை இழந்துள்ளனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க நாடாளுமன்ற கட்டட வளாகத்தில், தனது நிறுவன அடையாள அட்டையை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு ஊழியரைப் பணிநீக்கம் செய்துள்ளது ‘நவிஸ்டார்’ என்ற அமெரிக்க மார்க்கெட்டிங் நிறுவனம்.

“வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறி செயல்படுவதை எங்களின் நிறுவனம் ஒருபோதும் அனுமதிக்காது என்று நவிஸ்டார் நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும், கூஸ்ஹெட் இன்சூரன்ஸ் என்ற நிறுவனத்தில் பணியாற்றும் பால் டேவிஸ் என்பவர் வேலையிழந்துள்ளார். ஆனால், தான் எந்த வன்முறையிலும் ஈடுபடவில்லை. நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்தது தனது போராட்ட உரிமை என்றுள்ளார் அந்த ஊழியர்.

இப்படியாக, அமெரிக்க தலைநகரில் நடைபெற்ற போராட்டம், பலவிதமான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.