இன்றைய செய்திகள் சில…

a

அரசு விதிகளுக்கு உட்பட்டு தனியார் பள்ளிகள் செயல்படுகிறதா ? : தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

கரூரில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், அதிமுக பிரமுகர் அன்புநாதனுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது.

கட்சிக்கு உழைத்தவர்களைக் கைதூக்கி விடுவேன் என்று திமுக தலைவர் கருணாநிதி  கூறியுள்ளார்.

தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் பூரண மதுவிலக்கு அமுல்படுத்தப்படும் என பாஜக மாநில தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஐ.பி.எல் போட்டியில் முதல்முறையாக களமிறங்குகிறார் தென் ஆப்பிரிக்க தொடக்க வீரர் ஹசிம் ஆம்லா.

தேர்தல் அறிக்கை வாக்குறுதிகளை தி.மு.க.வினரால் நிறைவேற்ற முடியாது என்று ஆர்.சரத்குமார் கூறியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இன்று வெளியிட்ட ஒரு நாள் போட்டிக்கான தர வரிசையில் இந்திய அணி நான்காம் இடம் பிடித்துள்ளது.

உத்தரகண்ட் மாநிலத்தில், ஹரீஷ் ராவத் அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது குறித்து விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் 6ம் தேதி வரை கால அவகாசம் அளித்துள்ளது.

ஜெயலலிதா ஆட்சியில் சென்னையில் ஒரு பாலமாவது கட்டப்பட்டுள்ளதா ? : மு.க.ஸ்டாலின் கேள்வி

தமிழகத்தில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் இதுவரை ரூ.81.85 கோடி பறிமுதல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

செஞ்சி அருகே அவலூர்பேட்டையில் தேமுதிக நிர்வாகி வீட்டில் கொள்ளையடித்த போலி பறக்கும் படை கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று கத்திரி வெயில் தொடங்கியுள்ள நிலையில் இன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் கனமழை பெய்து வருகிறது.