இன்றைய முக்கிய செய்திகள் சில..

download (1)

ந்தோனேசியாவில் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவு.

தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகர் பதவிக்கு போட்டியிடும் தனபால் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

நக்கீரன் வார இதழ் மீது முதல்வர் சென்னை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு.

தமிழக சட்டப் பேரவை நாளை கூடுகிறது பேரவைத் தலைவராக தனபால் தேர்வாகிறார்.

மதுவை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பவர் மீது கடும் நடவடிக்கை : காவல்துறை எச்சரிக்கை.

குஜராத் குல்பர்க் சொசைட்டி தாக்குதல் வழக்கில் 24 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு.

வரும் திங்கள்கிழமை பதவி ஏற்பு விழா நடத்த உத்தேசித்திருக்கிறோம் – புதுவை முதல்வர் நாராயணசாமி சோனியாவை சந்நித்த பின் டெல்லியில் பேட்டி.

பிளஸ் 2 தேர்வுக்கான மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீடுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.

உசிலம்பட்டி அருகே சொத்து தகராறில் அக்கா மற்றும் அண்ணணை வெட்டி கொலை செய்த தம்பி.

5 வருடங்களாக தமிழகத்தில் காணாமல் போன குழந்தைகள் தொடர்பாக தமிழகஅரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு.

நாமக்கல் கோகுல்ராஜ் கொலை வழக்கில் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யபட்ட தீரன் சின்னமலை பேரவைத் தலைவர் யுவராஜ் நெல்லை டவுண் காவல்நிலையத்தில் கையெழுத்து போட்டார்.

சென்னை ஆல்வார்பேட்டையில் சிலைகள் பதுக்கி வைக்கப்பட்ட வீட்டில் போலீசார் சோதனை செய்ததில் மேலும் 100 சிலைகள் கண்டெடுப்பு.

பழனி அடிவாரம் தேவஸ்தான கடைகளில் வாடகை பாக்கி செலுத்தாத 10 க்கும் மேற்பட்ட கடைகளை சீல்  வைத்து  தேவஸ்தான நிர்வாகம்  நடவடிக்கை.

கார்ட்டூன் கேலரி