“விஜய் அரசியலுக்கு வருவதை கண்டு சிலர் பயப்படுகிறார்கள்!:  எஸ்.ஏ.சந்திரசேகர்  

விஜய் அரசியலுக்கு வருவதை கண்டு சிலர் பயப்படுகிறார்கள் என்று அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற சர்கார் பட ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய், தனது அரசியல் ஆர்வத்தை மறைமுகமாக வெளிப்படுத்தினார்.

இவரது பேச்சை ஆதரித்தும் விமர்சித்தும் பலரும் சமூகவலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். இந்நிலையில் விஜய் அரசியலுக்கு வருவதை கண்டு சிலர் அச்சப்படுவதாக அவரது தந்தையும் திரைப்பட இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

பாபநாசத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “விஜய் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று தமிழன் என்ற முறையில் விரும்புகிறேன். அவர் அரசியலுக்கு வந்தால் என்ன தவறு..? மக்களால் உயர்த்தப்பட்டவர் மக்களுக்கு நல்லது செய்ய வந்தால் என்ன தவறு? அவர் அரசியலுக்கு வருவதை கண்டு சிலர் அச்சப்படுகின்றனர்” என எஸ்.ஏ. சந்திரசேகர் தெரிவித்தார்