ஜம்மு காஷ்மீருக்கு மட்டுமா சிறப்பு அந்தஸ்து? – வேறுசில மாநிலங்களுக்கும்தான்..!

சமீபத்தில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதற்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒருசேர எழுந்துள்ளன.

மசோதாவுக்கு ஆதரவு தெரிவிப்போரில் பலர், இந்தியாவில் இத்தனை மாநிலங்கள் இருக்கும்போது, ஜம்மு காஷ்மீருக்கு மட்டும் எதற்காக சிறப்பு அந்தஸ்து? என்று கேள்வி எழுப்புகின்றனர். ஆனால், சிறப்பு அந்தஸ்து என்பது ஜம்மு காஷ்மீருக்கு மட்டுல்ல, இந்தியாவின் வேறுசில மாநிலங்களுக்கும், வேறுபட்ட காரணங்களுக்காக அரசியல் சட்டத்தின் சில குறிப்பிட்ட பிரிவுகளின்கீழ் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டு வருகிறது.

அரசியல் சட்டத்தின் எந்தப் பிரிவுகளின் கீழ், எந்தெந்த மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து என்பது குறித்த விபரம்;

பிரிவு 371 – குஜராத் மற்றும் மகாராஷ்டிரா
பிரிவு 371A – நாகலாந்து
பிரிவு 371B – அஸ்ஸாம்
பிரிவு 371C – மணிப்பூர்
பிரிவு 371D – ஆந்திரா
பிரிவு 371E – சிக்கிம்
பிரிவு 371G – மிஸோரம்
பிரிவு 371H – அருணாச்சலப் பிரதேசம்
பிரிவு 371I – கோவா

காஷ்மீரைப் போலவே, இமாச்சலப் பிரதேசத்திலும் வெளிமாநிலத்தவர் நிலம் வாங்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.