சென்னை:

மிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த குளிர்ச்சி செய்தியால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தெற்கு கர்நாடகத்தின் உள்பகுதி வளிமண்டலத்தில்  மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால், தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை  மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு மழைக்காலத்தில்  எதிர்பார்த்த அளவு மழை பெய்யாமல் பொய்த்து போன நிலை யில், தற்போது வெயிலும் கடுமையாக வாட்டி வருகிறது. சென்னை உள்பட பல மாவட்டங்களில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடி வருகிறது.

இந்த நிலையில்  வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த நான்கு நாட்களுக்கு லேசானது முத்ல் மிதமானது வரை மழை பெய்ய வாப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தெற்கு கர்நாடகத்தின் உள் பகுதி வளிமண்டலத்தில்  மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும்,  சென்னையில் காலை வேளையில் வானம் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும். அதன்பிறகு, வானம் தெளிவாக இருக்கும். அதிகபட்சமாக 33 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாக வாய்ப்பு உள்ளது.

மேலும் தமிழகத்தின் உள் மாவட்டங்களான வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், கரூர், திண்டுக்கல் ஆகியவற்றில் வழக்கத்தைவிட 3 முதல் 7 டிகிரி வரை வெப்ப நிலை உயர வாய்ப்புள்ளது.

இவ்வாறு சென்னை வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.