சென்ன‍ை vs டெல்லி 2வது லீக் போட்டி – சில சிறப்பம்சங்கள்!

மும்பையின் வான்கடே மைதானத்தில், சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கிடையே நடைபெற்றுவரும், இத்தொடரின் 2வது லீக் போட்டியில் சில கவனிக்கத்தக்க சிறப்பம்சங்கள் உள்ளன.

* இரண்டு அணிகளுக்குமே தலைமை தாங்குபவர்கள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென்கள் (எஸ்எஸ்.தோனி & ரிஷப் பன்ட்)

* இதில், இந்த ஐபிஎல் தொடரிலேயே, அதிக வயதுள்ள கேப்டன் எம்எஸ்.தோனி. அதேசமயம், இத்தொடரிலேயே குறைந்த வயதுள்ள கேப்டன் ரிஷப் பன்ட்.

* எதிரெதிர் அணிகளில், சகோதரர்கள் இடம்பெற்றுள்ளனர். (சென்னை அணியில் சாம் கர்ரன் மற்றும் டெல்லி அணியில் டாம் கர்ரன் – இங்கிலாந்து நாட்டவர்கள்)

* கடந்த தொடரிலிருந்து, மனஸ்தாபம் காரணமாக விலகிய சுரேஷ் ரெய்னா, சென்னை அணியைவிட்டே ஒரேடியாக விலகிவிடுவார் என்று கருதப்பட்ட நிலையில், அந்த அணியில் மீண்டும் இடம்பெற்று, முதல் போட்டியிலேயே சிறப்பாகவும் ஆடியுள்ளார்.

தோனியுடன் முதலில் நெருக்கமாக காட்டிக்கொண்டு, பின்னர், அதே தோனியுடன் பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அணியிலிருந்து கடந்த தொடரில் திடீரென விலகினார். அமீரகத்திலிருந்து, போட்டிகள் துவங்கும் முன்னதாகவே நாடு திரும்பினார். சுரேஷ் ரெய்னா முதிர்ச்சியில்லாமல், அவசரப்பட்டு விட்டதாக பலர் விமர்சித்தனர்.

* தோனியின் ஓய்வு குறித்து அதிகம் பேசப்பட்ட நிலையில், இத்தொடரில் களமிறங்கியுள்ளார் அவர்.