க்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெறும் பீகார் மாநிலத்தில் இன்னும் இரண்டு மாதங்களில் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடக்க உள்ளது.

இந்த நிலையில் அந்த மாநில தொழில்துறை அமைச்சர் ஷியாம் ரசாக்கை நேற்று அதிரடியாக , மந்திரி பதவியில் இருந்து ‘டிஸ்மிஸ்’ செய்துள்ளார், முதல்-அமைச்சர் நிதீஷ்குமார்.

கொஞ்ச நேரத்தில் ரசாக்கை, ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்தும் நீக்கி , அந்த கட்சியின் தலைவர் நாராயண் சிங் உத்தரவு பிறப்பித்தார்.

நிதீஷ்குமாருடன் அண்மைக்காலமாக உரசல் இருந்ததால், ஷியாம் ரசாக் , பிரதான எதிர்க்கட்சி யான ஆர்.ஜே.டி. கட்சியில் சேரப்போவதாக செய்திகள் கசிந்த நிலையில், அவரது இரு பொறுப்பு களையும் ஒரே சமயத்தில் பறித்துள்ளது, ஐக்கிய ஜனதா தளம்.

ஆர்.ஜே.டி.கட்சியிலும் நேற்று களையெடுப்பு நடந்துள்ளது.

அந்த கட்சியின் மூன்று எம்.எல்.ஏ.க்கள், கட்சியில் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர்.

கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால், கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ் உத்தரவின் பேரில் , மூன்று எம்.எல்.ஏ.க்களும் நீக்கப்பட்டுள்ளதாக ஆர்.ஜே.டி. கட்சி அறிவித்துள்ளது.

-பா.பாரதி.