Random image

பட்டமளிப்பு விழாவில் தேசிய கீதத்தை அவமதித்த காஷ்மீர் மாணவர்கள்: பரபரப்பு

ஸ்ரீநகர்:

ம்மு காஷ்மீரில் செயல்பட்டு வரும்  மத்திய பல்கலைக்கழகத்தில் இன்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அ விழாவில் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது சில காஷ்மீர் மாணவர்கள் எழுந்து நிற்காமல் உட்கார்ந்திருந்து தேசிய கீதத்தை  அவமதிப்பு செய்தனர். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் ஷேர்-இ- வேளாண் அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (SHER-E-KASHMIR UNIVERSITY OF AGRICULTURAL SCIENCES AND TECHNOLOGY OF KASHMIR )  செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது.

தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது அமர்ந்திருந்த மாணவர்கள்

விழாவின் போது இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இதற்கு அனைத்து மாணவ மாணவிகளும், பேராசிரியர்களும்  எழுந்து நின்று மரியாதை செய்தனர்.  இந்த நிலையில் சில மாணவர்கள் எழுந்து நின்று மரியாதை செய்யாமல், தேசிய கீதத்தை அவமதிக்கும் நோக்கில் அமர்ந்து இருந்துள்ளனர். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.  இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தேசிய கீதத்தை அவமதித்த  மாணவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், அவர்களை பட்டத்தை பறிக்க வேண்டும் என்றும், அவர்களை நாடுகடத்த வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக காஷ்மீர் பல்கலைக்கழகம் விசாரணை நடத்தி வருவதாகவும், தேசிய கீதத்தை அவமதித்த மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.