‘உங்களுக்கு வேற வேலையே இல்லையா: ‘கண்ணசைவு புகழ்’ பிரியாவாரியார் பாடல் வழக்கில் உச்சநீதி மன்றம் நெத்தியடி

சென்னை:

ஸ்லாமிய மதத்திற்கு எதிராக நடித்ததாக   ‘ஒரு அடார் லவ்’ என்ற மலையாளப் படத்தில் நடித்த நடிகை பிரியா வாரியார் மற்றும் இயக்குனர் தயாரிப்பாளர் மீது தொடுக்கப்பட்ட வழக்கு  உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

அப்போது, இதுபோன்ற வழக்குகள் தொடுப்பதை கண்டித்த நீதிபதிகள், உங்களுக்கெல்லாம் வேறு வேலையேயில்லையா என்று காட்டமாக கருத்து தெரிவித்தனர்.

கடந்த பிப்ரவரி மாதம் 14ந்தேதி உலக காதலர் தினத்தன்று  ‘ஒரு அடார் லவ்’ என்ற மலையாளப் படத்தில் வரும் ஒரு பாடல் காட்சி, யூ டியூப் வலைத்தளத்தில் படக்குழு வெளியிட்டது. அதில் ‘மாணிக்க மலராய பூவி…’ என்ற மலையாள  மெல்லிசை பாடல் ஒரு கல்லூரி / பள்ளி விழாவில் பாடுவதுபோல படமாக்கப்பட்டு உள்ளது.

அந்த பாடல் காட்சியில் நடித்திருந்த பிரியா பிரகாஷ் வாரியாரின் கண்ணசைவு சமூக வலைதளங்களில் வைரலானது. அதே நேரத்தில் சர்ச்சைகளையும் உருவாக்கியது.

பிரியாவின் கண்ணசைவுக்கு ஒருசில இஸ்லாமிய அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. மேலும், ஐதராபாத், மும்பை காவல் நிலையங்களில் புகாரின் பேரில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளுக்கு உச்சநீதி மன்றம் தடை விதித்திருந்தது.

இந்த நிலையில், பிரியா வாரியர் கண்ணசைவுடன் நடித்திருந்த அந்த பாடல்,  இஸ்லாமியர்களின் உணர்வுகளை பாதிப்பதாக வும்,  முகமது நபியின் மனைவியை பற்றி தவறாக பேசுகிறது என்று ஐதராபாத் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதுதொடர்பான வழக்கில் படக்குழு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. உச்சநீதி மன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது,  பாடலில் தவறான வரிகள் எதுவும் கிடையதுழ என்றும், கேரளாவின்  வடக்கு பகுதியில் இஸ்லாமியர்களை பாடக்கூடிய பாடல்தான். முகமது நபிக்கும் அவரது முதல் மனைவி கதீஜாவிற்கும் இடையேயானகாதலை பற்றியும், அன்பை பற்றியுமான பாடல் இது என்று விளக்கம் அளித்தனர்.

இந்த வழக்கை உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஏ.எம்.கன்வில்கர், சந்திரசூட் ஆகிய 3 பேர் கொண்ட அமர்வு விசாரித்து வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது,  இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 295A பிரிவின் கீழ் ஒரு அடார் லவ் திரைப்படத்தின் கண்மூடித்தனமான காட்சி நீக்கப்படாது என்றும்,  படித்தில் நடித்திருந்த நடிகை, இயக்குனர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆகியோருக்கு எதிராக  போடப்பட்ட அனைத்து  எப்.ஐ.ஆர்.களையும் ரத்து செய்வதாகவும் உத்தரவிட்டது.

இதன் காரணமாக  வழக்கில் இருந்து ப்ரியா வாரியர், படத்தின் இயக்குனர், படத்தின் தயாரிப்பாளர் ஆகியோர் விடுவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.  மேலும். யாரோ எதோ பாடல் எழுதுகிறார்கள். அதில் யாரோ நடிக்கிறார்கள். இதில் உங்களுக்கு என்ன பிரச்சனை இருக்கிறது. ஏன் இப்படி எல்லாவற்றுக்கும் போலீசில் புகார் அளிக்கிறீர்கள்… உங்களுக்கு வேறு வேலையே இல்லையா என்று தலைமைநீதிபதி தீபக் மிஸ்ரா கண்டித்துள்ளார்.

கண்டிப்பாக கேட்டுள்ளனர்.