ரஜினியை யாரோ தவறாக வழி நடத்துகிறார்கள்! அமைச்சர் செல்லூர் ராஜு

சென்னை:

ஜினியை யாரோ தவறாக வழிநடத்துகிறார்கள் என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்து உள்ளார்.

துக்ளக் விழாவில் ரஜினிய பேசிய பெரியார் தொடர்பான கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும் என திராவிட விடுதலை கழகத்தினர் கூறி வந்த நிலையில், தான் மன்னிப்பு கேட்க முடியாது என ரஜினிகாந்த் தெரிவித்தார்.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, பெரியார் குறித்து, 50 ஆண்டுகால பழமையான விஷயங்களை ரஜினி தற்போது பேச வேண்டிய அவசியம் இல்லையே என்று வினவியவர்,  ”யாரோ ரஜினியை தவறாக வழிநடத்துகிறார்கள்” என்றும், ரஜினிகாந்தின் மகள் இரண்டாவது திருமணம் நடைபெற்றது பெரியாரின் கொண்டுவந்த மாற்றம் காரணமாகவே என்றும் கூறினார்.