ஜெ. நினைவிடத்தில் அதிமுக பிரமுகரின் மகன் திருமணம்! கோகுல இந்திரா வாழ்த்து

சென்னை:

மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில், இன்று அதிமுக பிரமுகர் மகனின் திருமணம் இனிதே நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் கோகுலா இந்திரா நேரில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

அதிமுகவின் தென் சென்னை வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளராக இருந்து வருபவர் பவானி சங்கர். தீவிர  ஜெயலலிதா விசுவாசியான  இவரின் மகன் சதீஷ் மற்றும் மணமகள் தீபிகா ஆகிய இருவருக்கும் இன்று ஜெயலலிதாவின் சமாதியில் திருமணம் நடைபெற்றது.

இந்த திருமணத்தில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா,  எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் தமிழ் மகன் உசேன்,  ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன்  உள்பட பல அதிமுக நிர்வாகிகள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

ற்கனவே கடந்த பிப்ரவரி 24ந்தேதி அன்று “சென்னை 63-வது வட்ட அதிமுக பொருளாளரின் மகன் நான் ஜெயதேவன் என்பவர் மணப்பெண் சுவாதியின் கழுத்தில் கட்டி கல்யாணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.