அமெரிக்க நிறுவனத்தில் ரூ.70 லட்சம் சம்பளம் வாங்கும் ஏழை எல்க்ட்ரீசியன் மகன்!

டிப்ளமோ இன்ஜினியரிங் படித்த இந்திய மாணவர் ஒருவருக்கு அமெரிக்க நிறுவனம் ரூ.70 லட்ச ரூபாய் சம்பளத்தில் பணி வழங்கியுள்ளது.

டில்லியில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லமிய பல்கலைக் கழகத்தில் இன்ஜினியரிங் டிப்ளமோ படித்தவர்  முகமது அமீர் அலி.  இவரது குடும்பம் மிகுந்த ஏழ்மையானது. முகமது அலியின் தந்தை ஷம்ஷட் ஒரு எலக்ட்ரீசியன் ஆவார்.

12ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுக்காததால் முகமது அலியிக்கு கல்லூரியில் இஞ்னியரிங் படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.  இந்த நிலையில் முகமது அலி, ஜமியா மில்லியா இஸ்லமியா கல்லூரியில் கடந்த 2015ம் வருடம் மெக்கானிகல் பிரிவில் டிப்ளமோ இஞ்னியரிங் சேர்ந்தார்.

பொறியியல் பட்டப்படிப்பில் சேரமுடியவில்லை என்றாலும், தன்னுடைய கனவான எலக்ரிக் பிரிவில் மிகுந்த ஈடுபாட்டுடன் படித்தார்.

படிக்கின்ற காலத்தில் முக்கியமான புராஜெட்  ஒன்றை செய்தார்.  இந்த புராஜெட் முழுமைபெற்றால், செலவே இல்லாமல் எலக்ட்ரிக் வாகனங்களை இயக்க முடியும்.

இது குறித்து முகமது அலி பேசுகையில்,  “என் புராஜக்ட் எலக்டீரிசியன் பிரிவில்  புதிய ஐடியா ஆகும். ஆனால் ஆரம்பத்தில் என்னை என்னுடைய ஆசிரியர்கள் யாரும் நம்பவில்லை.  என்னுடைய உதவிப் பேராசிரியர் வக்கார் ஆலம் மட்டும்தான் என்னிடம் உள்ள திறமையை அறிந்து கொண்டு ஊக்கப்படுத்தினார்” என்றார் முகமது அலி.

முகமது அலியின் இந்த ஆராய்ச்சி குறித்து பல்கலைக் கழக இணையதளத்தில் பதிவிட்டார்.  இந்த ஆராய்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதேபோல், கல்லூரியின் இணையதளத்தில் உள்ள வீடியோ புராஜெட்டை அமெரிக்காவைச் சேர்ந்த பிரிஸ்ஸின் மொடார் நிறுவனம் கண்டு  வியந்துள்ளது.

இதன் அடிப்படையிலேயே முகமது அலிக்கு வருடம் ரூ. 70 லட்சம் சம்பளத்தில் பணி வழங்கியுள்ளது. டிப்ளமோ இன்ஜினியரிங் படித்தோருக்கு மிக அதிக ஆரம்ப சம்பளம் இதுவாகும்.