Random image

புற்றுநோய் பாதிப்பு: ‘காதலர் தினம்’ தமிழ்ப்பட நடிகை உருக்கமான டுவிட்

மும்பை:

பிரபல இந்தி நடிகையான சோனாலி பிந்த்ரே புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் உருக்கமாக பதிவு செய்துள்ளார். இது பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்தி,  தமிழ், தெலுங்க, கன்னடம் உள்பட பல மொழி படங்களில் நடித்திருப்பவர் சோனாலி பிந்த்ரே. தற்போது 43 வயதாகும் அவருக்கு திருமணமாகி ஒரு குழந்தையும் உள்ளது. இந்த நிலையில், அவர் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகி இருப்பதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.  இது திரைப்பட உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சோனாலி பிந்த்ரே  பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,  வாழ்கை விசித்திரமானது.  நீங்கள் எதிர்பார்க்காதது திடீரென நடந்துவிடும். சமீபத்தில்  உடம்பில் திடீரென ஏற்பட்ட வலி காரண மாக மருத்துவமனைக்கு சென்று சோதனை மேற்கொண்டேன். என்னை பரி சோதித்த டாக்டர்  நான் தீவிர புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.  பரிசோதனையின் முடிவு இவ்வாறாக இருக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை என்று தெரிவித்து உள்ளார்.

நான் உடனடியாக சிகிச்சை எடுக்க வேண்டும் என்பதற்காக அமெரிக்காவின் நியூயார்க் நகர் மருத்துவமனையில் சிகிச்சையை மேற்கொண்டு வருகிறேன். இதிலிருந்து விரைவில் மீண்டு விடுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றும்,  புற்று நோய்க்கு எதிராக போராடிக்கொண்டு இருக்கிறேன், நிச்சயம் வென்று விடுவேன். எனக்கு பக்கபலமாக என் குடும்பத்தினரும் நண்பர்களும் இருக்கிறார்கள் என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

சோனாலி பிந்த்ரேவின் பதிவு பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

பிரபல நடிகையான  சோனாலி பிந்த்ரே தமிழில் வெளிவந்த ‘காதலர் தினம்’ என்ற வெற்றி படத்தில் நடித்து பிரசித்தி பெற்றவர். அந்த படத்தில் சோனாலி பிந்த்ரேவுக்கு ஜோடியாக நடிகர் குணால் மற்றும் நாசர், கவுண்டமணி, சின்னி ஜெயந்த் போன்றோர் நடித்திருந்தனர்.

கடந்த 202ம் ஆண்டு சினிமா தயாரிப்பாளர்  கோல்டி பெஹல்லை திருமணம் செய்துகொண்டு திருமண பந்தத்தில் இணைந்த அவருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இருந்தாலும் அவ்வப் போது சினிமா நிகழ்ச்சிகளிலும், தொலைக்காட்சிகளில் நடைபெற்று வந்த நடன நிகழ்ச்சிகள் போன்றவற்றிற்கு நடுவராக இருந்து வந்தார்.

கடந்த சில காலங்களாக திரைப்படத்துறையில் இருந்து ஒதுங்கி இருந்த சோனாலி பிந்த்ரே, புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது திரையுலகை சேர்ந்தவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.