மே 8 ஆம்  நடிகை சோனம் கபூர் திருமணம்!

 

 

இந்தி நடிகைசோனம் கபூருக்கும், தொழிலதிபர் ஆனந்த் அகுஜாவுக்கும்வரும் வரும் மே 8 ஆம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது.

இந்தி திரையுலகின் முன்னணி நடிகை சோனம் கபூர் , ஆரம்பத்தில் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியிடம் சோனம் கபூர் உதவியாளராகப் பணியாற்றினார்.  பிறகு அவர் இயக்கிய  சாவரியா (2007) திரைப்படத்தில் ரன்வீர் கபூருடன் நடித்து, இந்தி திரைப்பட உலகில் அறிமுகமானஆர். இத்திரைப்படம் வர்த்தக ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும், நல்ல பெயர் கிடைத்தது.

2009 ஆம் ஆண்டில், ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ராவின் டெல்லி-6 படத்தில் அபிஷேக் பச்சன் உடன் சோனம் நடித்தார். அந்தப் படத்தில் உள்ள ’மசக்கலி மசக்கலி’ என்ற பாடல் மொழிகளைக் கடந்து நாடு முழுதும் பிரபலமானது.

 

இதையடுத்து அவருக்கு  படவாய்ப்புகள் குவிந்தன.  நடிகர் தனுஷூடன் ராஜ்னா படத்தில் நடித்தார். அந்த படம் தமிழிலும் வெளியானது.

 

இந்நிலையில் 32 வயதான சோனம் கபூருக்கு திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியானது. டில்லியைச் சேர்ந்த தொழில் அதிபரான ஆனந்த் அகுஜாவும், சோனம் கபூரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். தற்போது  இருவருக்கும் வரும் மே 8 ஆம்தேதி திருமணம் நடைபெற இருப்பதாக சோனம் கபூரின் குடும்பத்தினர் அதிகாரபூர்வமாக நேற்று அறிவித்தனர்.

இதுகுறித்து சோனம் கபூரின் குடும்பத்தினர்வெளியிட்ட செய்தியில், “சோனம் கபூரின் திருமணம் வரும் மே 8 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.  இந்த நிகழ்வு எங்கள் குடும்பத்தின் முக்கியமான ஒன்று. இந்த செய்தியை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்’’ என்று தெரிவித்து இருக்கிறார்கள்.

மும்பையில் உள்ள சோனம் கபூரின் வீடு, திருமணத்திற்காக மின் விளக்குகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது.