‘சர்க்கார்’ திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் இணையத்தில் லீக் – அதிர்ச்சியில் படக்குழு

சர்கார் படத்தில் இடம்பெற்றுள்ள 5 பாடல்களின் டிராக் லிஸ்ட் வெளியிடப்பட்ட சிறிது நேரத்திலேயே மொத்த பாடல்களும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியிடப்பட்டுள்ளது.

sarkar

கத்தி மற்றும் துப்பாக்கி ஆகிய படங்களைத் தொடர்ந்து 3வது முறையாக விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் இணைந்துள்ளார். இவர்களுடன் இணைந்து ராதாரவி, பழ.கருப்பையா, யோகி பாபு, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

வரும் தீபாவளி பண்டிக்கைக்கு இத்திரைப்படம் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரமாண்ட வகையில் நடக்கயிருக்கிறது. ஆனால், அது எங்கு நடக்கயிருக்கிறது என்று இதுவரை தெரியாமல் இருந்த நிலையில், தற்போது தாம்பரத்தில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடக்கயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள சிம்டாங்காரன் மற்றும் ஒருவிரல் புரட்சி ஆகிய பாடல்களின் சிங்கிள் டிராக்கை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டு வைரலாக்கியது. தொடர்ந்து இப்படத்தில் இடம்பெற்றுள்ள 5 பாடல்களின் டிராக் லிஸ்ட்டை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் சர்க்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா நடப்பதற்குள் இப்படத்தின் பாடல்கள் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியாகியுள்ளது. பலரும் இதனை டவுன்லோடு செய்துள்ளனர். மேலும், வெளியிடப்பட்ட சிறிது நேரத்தில் இந்த தளத்தை முடக்கப்பட்டது. மெட்ராஸ் ராக்கர்ஸ் என்ற இணையத்தில் சர்க்கார் திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் டவுன்லோடு செய்யும் விதமாக வெளியிடப்பட்டுள்ளது.

சர்கார் டிராக் லிஸ்ட்…

சிம்டாங்காரன்…

பாடியவர்கள் : பாமா பாக்யா, விபின் மற்றும் அபர்ணா நாராயண்

ஒரு விரல் புரட்சி…

பாடியவர்கள் : ஏஆர் ரஹ்மான் மற்றும் ஸ்ரீநிதி வெங்கடேஷ்

டாப் டக்கர்…

பாடியவர்கள் : மொகித் சவுகான்

ஓஎம்ஜி பொண்ணு…

பாடியவர்கள் : சித் ஸ்ரீராம், ஜோனிதா

சிஇஓ இன் தி ஹவுஸ்…

பாடியவர்கள் : நகுல் மற்றும் பிளாஷி