பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி நடிப்பில் வெளியான ‘மாரி 2’ எனும் படத்தில் ரவுடி பேபி என்ற பாடலை தனுஷ் எழுதி பாடி இருந்தார்.

இந்த பாடலுக்கு பிரபு தேவா நடனம் அமைத்திருந்தார். மேலும் இதில் தனுஷ், சாய் பல்லவியின் நடனம் ஆடியிருந்தார்.

இணையத்தில் வைரலான இந்த பாடல் சர்வதேச பில்போர்ட் இசைப்பட்டியலிலும் இடம்பெற்று சாதனை படைத்தது.

தற்போது 800 மில்லியன் பார்வையாளர்களை கடந்து Youtube இல் ரவுடி பேபி பாடல் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. அதோடு இந்த பாடல் இதுவரை 3 மில்லியன் லைக்குகளையும் பெற்றுள்ளது.