செல்வராகவன், தனுஷை பாராட்டிய நடிகை சோனியா..

--

காதல்கொண்டேன் படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்தார் சோனியா அகர்வால். செல்வராகவன் இயக்கினார். இப்படம் 150 நாட்கள் ஓடி வெற்றி பெற்றது. படம் வெளியாகி 17 ஆண்டுகள் ஆனதை யொட்டி செல்வராகவனுக்கு தனுஷ் நன்றி தெரிவித்து மெசேஞ் வெளியிட்டார்.


சோனியா அகர்வால் இப்படத்துக்கு பிறகு செல்வராகவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் கருத்து வேறு பாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தார். சோனியா அகர்வாலுக்கு ரசிகர்களிடையே நல்லதொரு பெயரை பெற்றுத் தந்த படம் காதல் கொண்டேன் அவர் செல்வராகவனுக்கு 17 வருட காதல் கொண்டேன் பட வாழ்த்து பகிர்வாரா என்று ரசிகர்கள் சந்தேகத்துடன் பார்த் தனர். ஆனால் தொழில் ரீதியாக தனது கடமையை ஆற்றியிருக்கிறார் சோனியா. 17 வருட வாழ்த்தை பகிர்ந்தார். அதில்.’கடவுளுக்கு நன்றி, தமிழ்நாட்டின் அன்பான ரசிகர்களுக்கு என்னை, ’காதல்கொண்டேன்’ படத்தில் அறிமுகப் படுத்திய செல்வராகவன், கஸ்தூரிராஜா, தனுஷ் மற்றும் அப்படத்தில் பணியாற் றிய டெக்னிஷியன்கள், நடிகர்கள் அனைவருக்கும் என் நன்றி. தமிழ் திரையுலகில் என்றைக்கும் ஒப்பிட முடியாத ஒரு படமாக இது திகழும்’ என வாழ்த்து சொல்லி பாராட்டியிருக்கிறார் சோனியா அகர்வால்.