பாஜக.வுக்கு எதிராக தேசிய அளவில் ஒன்று சேர வேண்டும்….எதிர்கட்சிகளுக்கு சோனியா அழைப்பு

டில்லி:

மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதோடு ராஜஸ்தான் இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்திற்கு தலைமை வகித்த சோனியா காந்தி பேசுகையில், ‘‘மாநில விவகாரங்களில் உள்ள வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு தேசிய அளவில் பாஜக.வுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்று சேர வேண்டும். நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் இணைந்து செயலாற்ற வேண்டும்.

மத, இன வன்முறைகள் பரப்பபடுவதில் விழிப்புடன் இருக்க வேண்டும்’’ என்றார். இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்பட பல எதிர்கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். பாஜக கூட்டணியில் இடம்பெறாத 17 கட்சிகளுக்கு இக்கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது என்பது குறுப்பிடத்தக்கது.