ரஷ்யா : யூரேசியன் பெண்கள் மாநாட்டில் கலந்து கொள்ளும் சோனியா காந்தி

டில்லி

ஷ்யாவில் நடைபெற உள்ள யுரேசியன் பெண்கள் மாநாட்டில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனிய காந்தி கலந்துக் கொள்கிறார்.

யுரேசிய பெண்கள் அமைப்பு ஐரோப்பா மற்றும்  ஆசியாவில் அமைந்துள்ள பெண்கள் கூட்டமைப்பு ஆகும்.   இந்த அமைப்பின் இரண்டாவது கூட்டம் வரும் புதன்கிழமை ரஷ்யாவில் நடைபெற உள்ளது.    இந்த விழாவில் கலந்துக் கொள்ள இந்தியாவின் சார்பில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அழைக்ப்பட்டுள்ளார்.

 

அதை ஒட்டி அவர் ரஷ்யாவில் இந்த கூட்டத்தில் கலந்துக்கொள்ள உள்ளார்.   அப்போது அவர் உலகப் பெண்கள் முன்னேற்றம் குறித்து உரையாற்ற உள்ளார்.  அத்துடன் உலக முன்னேற்றத்தில் இளம் பெண்கள் பங்களிப்பு குறித்த விவாதத்தில் கலந்துக் கொள்ளப் போகிறார்.

அப்போது அவருக்கு இந்த அமைப்பு விருது வழங்க உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.