டெல்லி: காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவரது உடல்நிலையில் என்ன பாதிப்பு என்பது குறித்து தகவல்கள் வெளியாகி வில்லை. சில மாதங்களாக பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து பூரண ஓய்வில் இருந்து வருகிறார்.

சோனியா காந்தி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள தகவல் அறிந்த கட்சியின் முக்கிய தலைவர்கள் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர். அவரது உடல்நிலை குறித்து காங்கிரஸ் தொண்டர்களும் கவலை அடைந்துள்ளனர்.