கர்நாடக காங்கிரஸ் தலைவராகிறார் டி.கே.சிவகுமார்

டெல்லி

ர்நாடக மாநில சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று துவங்கி இருக்கும் நிலையில். கர்நாடக காங்கிரஸ் கட்சியில் காலியாக உள்ள தலைமை பொறுப்பை அறிவிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அகில இந்திய காங்கிரஸ் கட்சி செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

கர்நாடக காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த தினேஷ் குண்டு ராவ் இடைதேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட சரிவை தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக உள்ள சோனியா காந்தி தலைமையில் கர்நாடக காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஆலோசிக்கப்பட்டதாகவும்.

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் பல்வேறு பிரிவினரிடையே கலந்தாலோசித்து தலைவர் மற்றும் செயல் தலைவர் ஆகிய பொறுப்பிற்கு பெயர்கள் இறுதி செய்ய பட்டுள்ளதாகவும், அனைத்து தரப்பினரையும் திருப்திபடுத்தும் விதமாக இந்த முடிவு இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

தற்பொழுது கர்நாடகாவில் நிலவும் சூழலை திறம்பட சமாளிக்க, செயல்படக்கூடிய தலைவராக டி.கே.சிவகுமார் செயற்பட்டுவரும் நிலையில் அவருக்கே தலைவர் பொறுப்பு அளிக்கப்படும் என்று உறுதியாக சொல்லப்படுகிறது.

டி.கே.சிவகுமாருக்கு தலைவர் பொறுப்பு வழங்கும் பட்சத்தில் எம்.பி. பாட்டீல் செயல் தலைவராக இருப்பார் என்றும் தெரிகிறது.

இன்னும், ஓரிரு நாட்களில் இந்த அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாக கர்நாடக காங்கிரஸ் கட்சியினர் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.