மத்திய வேளாண் சட்டத்தை எதிர்த்து மாநிலத்தில் சட்டம் இயற்றுங்கள்! காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களுக்கு சோனியா உத்தரவு

டெல்லி: மத்தியஅரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டத்துக்கு எதிராக, மாநில அரசுகள் சட்டம் இயற்ற அகில காங்கிரஸ் கட்சித்தலைவர் சோனியா காந்தி வலியுறத்தி உள்ளது. காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யும் மாநில முதல்வர்கள் உடனே அதற்கான பணியில் ஈடுபடுமாறு அறிவுறுத்தி உள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் உள்பட நாடு முழுவதும் விவசாயிகள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  பஞ்சாப் உள்பட  நாட்டின் பல பகுதிகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லி இந்தியா கேட் பகுதியில் டிராக்டர் ஒன்று தீ வைத்து எரிக்கப்பட்டது.

விவசாயிகளின்  இந்த போராட்டங்களுக்கு காங்கிரஸ் உள்பட  எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால், மத்திய அரசின் வேளாண் சட்டங்களை நிராகரிக்கும் உரிமை மாநிலங்களுக்கு உண்டு என்றும், அரசியல் சட்டத்தின் 254 (2)- வது பிரிவு இதற்கு அனுமதி வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

[Article 254(2) of the Constitution says: “Where a law made by the legislature of a state with respect to one of the matters enumerated in the concurrent list contains any provision repugnant to the provisions of an earlier law made by Parliament or an existing law with respect to that matter, then, the law so made by the legislature of such state shall, if it has been reserved for the consideration of the President and has received his assent, prevail in that state: provided that nothing in this clause shall prevent Parliament from enacting at any time any law with respect to the same matter including a law adding to, amending, varying or repealing the law so made by the legislature of the state.”]

இந்த சட்டப்பிரிவின்படி, உடனே மத்தியஅரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுமாறு காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அறிவுறுத்தியுள்ளார்மாநில சட்டப்பேரவைகளில் சட்டம் இயற்றுவது குறித்து ஆலோசிக்குமாறு, காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களை சோனியா காந்தி கேட்டுக் கொண்டுள்ளதாகவும், இதற்கு காங்கிரஸ் முதல்வர் ஒப்புதல் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.