பெங்களூரு: கர்நாடகா இடைத்தேர்தலுக்கு பிறகு சோனியா என்ன முடிவெடுப்பார் என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் தேவகவுடா கூறியிருக்கிறார்.

கர்நாடகாவில் காலியாக உள்ள 17 தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு வரும் 5ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. தேர்தல் முடிவுகள் டிசம்பர் 9ம் தேதி அறிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் மைசூருவில் செய்தியாளர்களுக்கு முன்னாள் பிரதமர் தேவகவுடா பேட்டியளித்தார். அப்போது அவரிடம் கர்நாடகா இடைத்தேர்தல் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது.

 

அதற்கு தேவகவுடா பதில் கூறியதாவது: இடைத்தேர்தலுக்கு பிறகு என்ன நடக்கும்? சோனியா ஒரு முடிவெடுப்பார். அதை அப்படியே காங்கிரஸ் கட்சியினர் ஏற்றுக் கொள்வார்கள்.

எங்கள் கட்சியில் உச்சப்பட்ச அதிகாரம் படைத்த தலைவர் என்று யாரும் இல்லை. ஆகையால், தேர்தல் முடிவுகள் வரட்டும். அதன் பிறகு என்ன நடக்கிறது என்று பார்ப்போம் என்று கூறினார்.

காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி விரிசல் பற்றி எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர், ஆட்சி கவிழ்ந்த பிறகு நாங்கள் ஒன்றாக இருப்போம் என்று எதிர்பார்க்கிறீர்களா? என்று கூறினார்.