​சோனியா காந்தி – கருணாநிதி இன்று ஒரே மேடையில் பிரச்சாரம்

சோனியா காந்தி - கருணாநிதி (கோப்பு படம்)
சோனியா காந்தி – கருணாநிதி (கோப்பு படம்)

வரும் சட்டமன்ற தேர்தலை ஒட்டி காங்கிரஸ் – திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவா இன்று சென்னையில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி பிரச்சாரம் செய்கிறார். சென்னை தீவுத்திடலில்  நடைபெறும்  இந்த பிரசார பொதுக்கூட்டத்தில்,  திமுக தலைவர்  கருணாநிதியும் கலந்துகொண்டு  உரையாற்றுகின்றார்.

டில்லியிலிருந்து தனி விமானம் மூலம் சென்னை வரும் சோனியா காந்தி,   அங்கிருந்து புதுச்சேரி செல்கிறார். அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிறகு,   ஹெலிகாப்டர் மூலம் சென்னை வருகிறார்.  பிறகு  குண்டு துளைக்காத கார் மூலம் தீவுத்திடலில் நடைபெறும் பிரசார மேடைக்கு செல்கிறார்.

இங்கு நடைபெறும் பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில், திமுக தலைவர் கருணாநிதியுடன், ஒரே மேடையில் சோனியாகாந்தி  பேசுகிறார். சோனியாகாந்தி வருகையையொட்டி, டெல்லியிருந்து வந்துள்ள சிறப்பு பாதுகாப்பு படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு  இருக்கிறார்கள்.  பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை சுற்றி, ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.