சோனியா மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாடு பயணம்

புதுடெல்லி:

காங்கிரஸ்தலைவர் சோனியா மருத்துவ பரிசோதனைக்காக நேற்று வெளிநாடு செல்கிறார். அவருடன் ராகுலும் செல்கிறார்.

இதையடுத்து இவர்கள் இருவரும் வரும் நாளை தொடங்கவுள்ள பார்லி மழைக்கால கூட்டத்தொடரில் கலந்து கொள்ளமாட்டார்கள் என தெரிகிறது. முன்னரே செல்ல திட்டமிட்டிருந்த நிலையில் கொரோனா காரணமாக சற்று தாமதமாக சோனியா வெளிநாடு செல்கிறார்.

இந்நிலையில் பார்லி மழைக்கால கூட்டத் தொடரில் பெரும்பாலான உறுப்பினர்கள் கொரோனா அச்சம் காரணமாக கலந்து கொள்ள மாட்டார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.