ஜனவரி 23, 24ந்தேதி: உ.பி.யில் சோனியா, ராகுல் 2 நாள் சுற்றுப்பயணம்

டில்லி:

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வர உள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோர் 2 நாள் சுற்றுப்பயணமாக உ.பி. மாநிலம் செல்கின்றனர். அங்கு தங்களது தொகுதிகளுக்கு சென்று ஆய்வு நடத்துகின்றனர்.

உ.பி. மாநிலத்தில் இருந்து நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் சோனியா மற்றும் ராகுல்காந்தி. உத்தரப்பிரதேசத்தில் உள்ள ரேபரேலி சோனியா காந்தியின் பாராளுமன்ற தொகுதி ஆகும். இதேபோல், உ.பி.யில் உள்ள அமேதி தொகுதி ராகுல் காந்தியின் பாராளுமன்ற தொகுதி.

சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் தங்களது தொகுதிகளுக்கு ஜனவரி 23, 24-ம் தேதிகளில் சுற்றுப்பயணம் செல்ல உள்ளனர் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

விரைவில் நாடாளுமன்ற தேர்தல்  நடைபெற உள்ள நிலையில் சோனியா மற்றும் ராகுல் தங்களது தொகுதிகளுக்கு சென்று ஆய்வு நடத்துகின்றனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறிய, அமேதி தொகுதி காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அனில் சிங் , உ.பி. செல்லும் சோனியா மற்றும் ராகுல் காந்தி பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றனர். மாவட்ட அளவிலான கட்சி நிர்வாகிகளை சந்தித்து கட்சி பணிகளை முடுக்கி விடும் பணிகளில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்.

கார்ட்டூன் கேலரி